
மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று அறிக்கையின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய அமெரிக்க டொலரின் விற்பனை விலை 1 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை 365.74 ரூபாவாகும்.
இதேவேளை, கடந்த 11 நாட்களாக டொலரின் விற்பனை விலை 364 ரூபா என்ற நிலையான பெறுமதியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அவுஸ்திரேலிய டொலர், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகள் உட்பட பல நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது.
அதன்படி, அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை விலை 264.26 ரூபாவாகவும், யூரோவின் விற்பனை விலை 393 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பிற செய்திகள்

