
கொழும்பு,மே 30
கொழும்பு – பெஸ்டியன் மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றவியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில், அவற்றை கொழும்பு குற்றவியல் பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

