
களுத்துறை பண்டாரகம அட்டுலுகம சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 27ஆம் திகதி காணாமற்போய் மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட ஆயிஷா என்ற சிறுமியின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையும் வெளியாகியுள்ளது.
அதில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் சிறுமியின் உறவினர் எனவும் 29 வயதுடைய இளைஞரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை சிறுமி படுகொலை செய்யப்டப்ட சம்பவம் தொடர்பில் முன்னர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

