நேபாள விமான விபத்தில் இதுவரை 16 சடலங்கள் மீட்பு

நேபாளம்,மே 30

நேபாள விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இதுவரை 16 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 6 பேரின் உடல்களை பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

மலை உச்சியில் மோதிய பிறகு, விமானத்தின் பாகங்கள் சுமார் 100 மீட்டர் சுற்றளவில் பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விமானம் 14,500 அடி உயரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சடலங்களை மீட்பதற்காக 15 நேபாள இராணுவ வீரர்கள் கொண்ட குழு அந்த இடத்திற்கு அருகில் இறக்கப்பட்டதாக நேபாள இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *