‘ரெட்டா’ எனப்படும் ரனிந்து சேனாரத்ன கைது!

பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரும், அமைதியான போராட்ட இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான ரெட்டா என அழைக்கப்படும் ரனிந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும், நீதித்துறைக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், சுமார் 2 மணிநேரம் வரை வாக்குமூலம் வழங்கிய அவர், இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *