நாட்டுக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் மத்திய வங்கியினால் விசேட அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, அத்தியவசியப் பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளுக்காக, உள்நாட்டு வங்கிக் கட்டமைப்பின் ஊடாக, வெளிநாட்டுச் செலாவணிகளைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதகு, தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி சந்தர்ப்பத்தில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறந்த கணக்கு கொடுப்பனவு விதிமுறைகள் அல்லது சரக்கு கணக்கு விதிமுறைகளை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டு வங்கி முறைமையில் அந்நிய செலாவணி பணப்புழக்க நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டங்கள் கொண்டு வரப்படுவதாக மத்திய வங்கி மேலும் அறிவித்துள்ளது.
பிற செய்திகள்

