130 ஓட்டோ சாரதிகளுக்கு நன்கொடை வழங்கிய தியாகி அறக்கொடை ஸ்தாபகர்

யாழ், மே 30

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் தியாகேந்திரன் வாமதேவன் இன்றைய தினம் தலா ரூ. 5 ஆயிரம் வழங்கியுள்ளார்.

அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், எரிபொருள் விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு போன்றவற்றால் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டுள்ள விடயம் தியாகேந்திரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,
130 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இந்த பண உதவியை செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *