கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 487 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,707 ஆக உயர்வடைந்துள்ளது.
Advertisement
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 294,820 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 957 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 266,665 ஆக அதிகரித்துள்ளது.