கசிந்த ஆவணம் ஒன்றிலிருந்து, கனடாவில் எப்போது தடுப்பூசி பாஸ்போர்ட் தாயாராகும் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, 2021 டிசம்பர் வரை தேசிய கொரோனா தடுப்பூசி பாஸ்போர்ட் தயாராக வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. தேசிய அளவில் சரியான உள்கட்டமைப்பு எதுவும் இல்லாததால், மேலும் அது தாமதமாகவும் வாய்ப்புள்ளது.
உலக நாடுகள் மெதுவாக தங்கள் எல்லைகளை திறந்துவிடத் துவங்கியுள்ள நிலையில், கனடாவுக்கென்று தடுப்பூசி பாஸ்போர்ட் தயாராகாததால், கனேடியர்களின் சர்வதேச பயண திட்டங்கள் உறுதியற்றவையாகவே உள்ளன.
Advertisement
கனடா அமெரிக்கர்களை ஆகத்து 9 அன்றும், மற்ற நாடுகளின் பயணிகளை செப்டம்பர் 7 அன்றும் தன் நாட்டுக்குள் அனுமதிக்க தயாராகி வருகிறது.
அந்த நேரத்தில் தடுப்பூசி பாஸ்போர்ட் தயாராகியிருக்காது என்பதால், ArriveCAN ஆப்பையே நம்பியிருக்கவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.