
இந்தியாவின் ராஜஸ்தானில் திருமண கொண்டாட்டத்தின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் மணமகனை ஏற்றி வந்த குதிரை மிரண்டு தாறுமாறாக ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அஜ்மீர் மாவட்டத்தில் Rampura கிராமத்தில் நடந்த திருமண ஊர்வலத்தில் வந்தவர்களில் ஒருவர் பட்டாசு ஒன்றை கொளுத்திப் போட்டார்.
இதன்போது பட்டாசு வெடித்த சப்தம்கேட்டு மிரண்டு போன குதிரை தலைதெறிக்க மணமகனை சுமந்து கொண்டு நாலுகால் பாய்ச்சலில் ஓடியது.
Advertisement
இதனையடுத்து 4கிலோ மீட்டர் தொலைவில் அந்த குதிரையும் மணமகனும் கண்டுபிடிக்கப்பட்டனர். எனினும் அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
[embedded content]