வவுனியா, மகாகச்சக்கொடிய கிராமத்திற்கு அருகில் இரண்டு காட்டு யானைகள் சண்டையிட்டு கொண்ட சம்பவம் கிராம மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றது.
வனவிலங்கு அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கையில்,
இரண்டு யானைகளும் தங்கள் பகுதியில் அதிகாரத்தை பெறுவதற்காகவே சண்டையிட்டு கொண்டதாக தெரிவித்தனர்.
இரண்டு யானைகளும் சுமார் இரண்டு நாட்களாக குறித்த பகுதியில் இருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தை பார்வையிட அதிகளவான மக்கள் அப்பகுதியில் குழுமியிருந்ததனை அவதானிக்க கூடியதாக இருந்தது.





