ஒரு கிலோ போஞ்சியின் விலை 600 ரூபாவை கடந்தது!

சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அடுத்து வரும் மாதங்களில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சகல மரக்கறிகளினதும் ஒரு கிலோகிராம் விலை 400 ரூபாவுக்கும் அதிகமாகவுள்ளது.

கரட், பீட்ரூட், போஞ்சி, உருளை கிழக்கு, கோவா மற்றும் தக்காளி உள்ளிட்டவற்றின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளது.

ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாவை கடந்துள்ளது.

எதிர்வரும் சில மாதங்களில் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *