இலங்கைக்கு ஆதரவளிக்க தயார்! பிரித்தானிய பிரதமர் 

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து பிரித்தானிய பிரதமரிடம் விளக்கமளித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது ருவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாறுவதற்கு இலங்கைக்கு உதவ பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளதாக பிரதமர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே பிரித்தானிய பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

எரிசக்தி துறையில் இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *