பெண்குழந்தைகளை காப்பாற்றுங்கள் ! யாழில் போராட்டம் (வீடியோ இணைப்பு)

யாழில் இன்றைய தினம் அட்டுலுகம சிறுமி ஆயிஷாவிற்கு நீதி கோரி யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் செயற்பட்டுவரும் பல்வேறு பெண்கள் ஒன்றியத்தின் அமைப்புக்களைச் சார்ந்தவர்களின் ஏற்பாட்டில், இலங்கையில் வன்முறைக்கும் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதிகோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்கள் வலையமைப்பினர், சமூக ஆர்வலர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து தொடர்சியாக நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும், அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு விரைவில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இப்போராட்டத்தினை நடத்தினர்.

குறித்த போராட்டம் அரசே காலம் தாழ்த்ததே, நீதியை நிலைநாட்ட தவறாதே, இது மனிதம் தெரியாத மிருகங்களும் வாழும் தேசம், இன்று ஆயிஷா நாளை ?,பாதுகாப்போம்!பாதுகாப்போம்! சிறுவர் உரிமையை பாதுகாப்போம்! போன்ற பதாதைகளை ஏந்தி நடைபெற்றிருந்தது

சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க பொது மக்கள் ,இளைஞர்கள்,பெண்கள் ,சிறுவர்கள் என குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *