நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த எச்சரிக்கை நாளை (01) காலை 10 மணி வரை அமுலில் இருக்கும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.