சஷி வீரவன்சவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

சசி வீரவன்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், ரூ.100,000. அபராதமும் விதித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டு உட்பட இரண்டு கடவுச்சீட்டுக்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வீரவன்சவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்பிறகு, பாஸ்போர்ட் பெற போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதற்காக தன்னை சிறையில் அடைக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார்.

பிணை மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நேற்றைய தினம் ஒத்திவைத்திருந்த போதிலும், குறித்த வழக்கு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *