இலங்கையில் மேலும் 1,737 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இலங்கையில் மேலும் 1,737பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது

இதில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 30 பேரும் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய 1,707பேரும் உள்ளடங்குகின்றனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 294,850 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் மேலும் 57பேர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 266,665 ஆக  அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *