நாட்டின் சில பகுதிகளுக்கு நாள் முழுவதும் நீர்வெட்டு!

வத்தளயில் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை மறுநாள் (26) காலை 10 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வத்தள – நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதி, மாபோலையில் ஒரு பகுதி, வெலிகடமுல்ல, ஹெந்தல வீதி, நாயகந்த சந்தி வரையிலான அனைத்து குறுக்கு வீதிகள், அல்விஸ் டவுன், மருதானை வீதி, புவக்வத்த வீதி, கலககதூவ வீதி மற்றும் கெரவலபிட்டியின் ஒரு பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியவசிய திருத்தவேளை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *