இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கும், இலங்கை பொளத்த
இந்துப் பேரவையின் பொதுச் செயலாளர் தேசமான்ய எம்.ரி.எஸ் இராமச்சந்திரனுக்குமிடையில் கடந்த சனிக்கிழமை சந்திப்பொன்று நீதி அமைச்சில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் இலங்கையின் தற்போதய சூழல் பற்றியும், ஜேர்மன் சட்டநிறுவனத்தின் ஒத்துழைப்பு பற்றியும் அமைச்சருக்கு பொதுச்செயலாளரினால் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுவரை வடக்கு மாகாணத்தில் இருபத்தி மூவாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகளை சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளை தனது சொந்த நிதியில் இலவசமாக கற்பித்து வருவது தொடர்பில் அமைச்சருக்கு தெளிவுபடுத்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், பலகோடி கோடி இலங்கைப்பணத்தை செலவு செய்த இராமச்சந்திரனினுடைய தாய்நாட்டுப்பற்றை பாராட்டுவதாகவும், தொடர்ந்து இன்றைய சூழலில்
நீதி அமைச்சுவிற்கும் புதிய அரசுக்கும் கௌரவ ஆலோசகராக பணியாற்றுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம் வடக்கு மாகாணத்திற்கு அவரை யூன் மாத வார இறுதியில் நடைபெறவுள்ள எமது மொழியியல் மாணவர்களின் சான்றிதழ் வழங்கும் வைபவத்திகு பிரதம அதிதியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட பொழுது அமைச்சர் அதனை ஏற்றுக்கொண்டார்.

பிற செய்திகள்

