நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு வரிகளை திருத்தியமைக்க அரசாங்கம் இன்று தீர்மானித்துள்ளது.
அதன் மூலம் பெறுமதி சேர் வரியை 8 வீதத்தில் இருந்து 12 வீதமாகவும் தொலைத்தொடர்பு வரியை 11.25 வீதத்தில் இருந்து 15 வீதமாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதன் மூலம் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, தனிநபர் வருமான வரிச் சலுகையை மூன்று மில்லியன் ரூபாவில் இருந்து 1.8 மில்லியன் ரூபாய் வரை குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட வரிகள் தொடர்பான முழு விபரம்…