அணியின் பாதுகாப்பு உறுதியுனது : இன்று இலங்கை வருகின்றது அவுஸ்ரேலிய அணி !!

இலங்கை சுற்றுப்பயணத்திற்காக தமது அணியின் பாதுகாப்பை போட்டி அமைப்பாளர்கள், உறுதி செய்துள்ளதாக அவுஸ்ரேலிய அணி அறிவித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகின்ற அவுஸ்ரேலிய அணி மூன்று இருபதுக்கு இருபது, ஐந்து ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

பல வார கால ஊகங்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைக்குப் பின்னர் இன்று இலங்கைக்கு திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தை அவுஸ்ரேலிய அணி மேற்கொள்ளவுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக இல்லாவிட்டாலும், தார்மீக அடிப்படையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய வீரர்கள் தயங்குவதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *