வீட்டுக்குள் வைத்து 13 வயது சிறுமியை சித்திரவதை செய்த தந்தையும் மாமியும் கைது!

According to the Rape, Abuse & Incest National Network website, one out of every six American women and one out of every 33 men have been the victim of an attempted or completed rape in his or her lifetime. Sexual assault response coordinators and victim advocates work professionally and diligently to ensure the rights and needs of victims are met.(U.S. Air Force photo by Senior Airman Clayton Lenhardt/Released)

நுரைச்சோலைப் பகுதியில் வீடொன்றில் சித்திரவதைக்கு ஆளாகியிருந்த 13 வயதான சிறுமியொருவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய சிறுமியை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் அச்சிறுமியின் தந்தை மற்றும் மாமி ஆகியோரை கைது செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

தண்டனை சட்ட கோவையின் 308(ஆ) பிரிவுக்கமைய சிறுவர்களை வன்கொடுமைக்கு உட்படுத்துவது குற்றமாகுமென காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதற்கமைய சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *