பூஸா ரயில் நிலையத்துக்கு அருகில் வாகனம் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானமையால், கரையோர தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாத்தறையிலிருந்து பயணித்த சாகரிகா தொடருந்தில், மகிழுந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மகிழுந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக, அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பிற செய்திகள்