திருமலையில் கைக்குண்டு மீட்பு!

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள புன்னையடி பகுதியில் உள்ள கடற்கரையிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இக்கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ் கைக்குண்டானது திருகோணமலை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் இன்று புதன்கிழமை செயலிழக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *