
நிதி நெருக்கடி காரணமாக, தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் உள்ள மிருகங்களுக்கு உணவுகளை வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருள்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால், மிருகங்களுக்கு உணவுகளை வழங்குவதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

