திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 கிராம் ஹேரொயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவரை இம்மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று(1) உத்தரவிட்டார்.
கேணியடி,திருக்கடலூர்,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திருகோணமலை பகுதியில் ஹேரொயின் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக திருகோணமலை போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே 6 கிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் கைது செய்ததாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.