இலங்கையில் நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மாத்திரம் 4 இலட்சத்து 12 ஆயிரத்து 111 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதன்போது, 3 இலட்சத்து 66 ஆயிரத்து 622 பேருக்கு சினோபார்ம் முதலாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
அதேநேரம், ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்றையதினம் 39 பேருக்கு செலுத்தப்பட்டது.
மேலும் மொடர்னா தடுப்பூசியின் முதலாவத டோஸ் நேற்றையதினம் 69 ஆயிரத்து 830 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.