கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற கோட்டா கோ கம தாக்குதல் சம்பவம் தொடர்பாக மொரட்டுவை மேயரின் மகனும் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று மொரட்டுவை மேயரின் மகன், நகர சபையின் இரண்டு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியை வசந்தா ஹந்தபான்கொட, கொழும்பு நகர சபையின் உறுப்பினர் ஒருவர் என ஆறு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.


