மே 9 சம்பவம்: கைதான 13 பேரும் மீளவும் விளக்கமறியலில்

கொழும்பு, ஜுன் 01

மே 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கைதான 13 சந்தேகநபர்களும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று(01) கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த காந்தகம ஆகியோரும் மே 9 தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *