
கடந்த மே – 09 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விசுவாசிகள் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கவாதியான வசந்த ஹந்தபாங்கொட மற்றும் பத்து பேர் எதிர்வரும் ஜுன் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மே – 09 அமைதியின்மை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசுவாசி மஹிந்த கஹந்தகம ஆகியோரும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
கொழும்பில் அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலிமுகத்திடலிலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர்கள் சந்தேகநபர்களாக பெயரிடப்படவுள்ளதாக சட்டமா அதிபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக நீதிமன்றத்தினால் ஏற்கனவே பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகள் தாய்நாட்டுக்கு திரும்பினர்
திருச்சி சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்! அன்புமணி வலியுறுத்து
அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோகம்; சிறுவர்களுக்கு விளக்கமறியல்!
வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நீண்டகால விசா!
அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் அங்குள்ள தமிழ் அகதிகளை விடுவிக்குமா?
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்

