
கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.நாடாளுமன்ற வளாகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.கட்சித் தலைவர்கள் கூட்டம்இன்றையதினம் காலை 9.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற அமர்வு மற்றும் விவாதிக்கப்பட உள்ள சட்ட மூலங்கள் தொடர்பில் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.நாடாளுமன்றம்இதேவேளை எதிர்வரும் 7ம் திகதி முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட உள்ளது.நாடாளுமன்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

