தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி சென்ற இலங்கையர்கள் கைது

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கை சென்ற இலங்கையை சேர்ந்த இருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சமீபகாலமாக இலங்கையைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக தமிழகம் வந்து தமிழகத்தில் இருந்து கனடா செல்வதற்காக முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஹமில்டன் என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி சட்டவிரோதமாக தமிழகம் வந்து பின் பெங்களூரில் இருந்து விமானம் மூலமாக கனடா செல்வதற்காக பெங்களூர் விமான நிலையம் சென்றபோது அவர் வைத்திருந்த கடவுச்சீட்டு போலியானது என கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பினையில் விடுவிக்கபட்டதையடுத்தது இலங்கை தப்பி செல்ல தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி வந்துள்ளார்.

மேலும் கடந்த 13ம் தேதி யாழ்பாணத்தை சேர்ந்த ஸ்ரீராஜ் கனடா செல்வதற்காக சட்ட விரோதமாக படகில் வந்து நாகப்பட்டினத்தில் தங்கி இங்கிருந்துள்ளார். ஆனால் கடவுச்சீட்டு பெறுவதற்கு போதிய பணம் இல்லாததால் ஸ்ரீராஜும்; பெங்களூரில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஹமில்டன் ஆகிய இருவரும் கடந்த 20ஆம் தேதி இரவு நாகப்பட்டிணம் கோடியக்கரையில் இருந்து சட்டவிரோதமாக இலங்கை யாழ்ப்பாணத்திற்கு கள்ளத்தோணியில் சென்றுள்ளனர்.

இவர்களை இலங்கை அல்லைப்பிட்டி தீவில் வைத்து அந்நாட்டு கடற்படையினர் கைது செய்துடன் இருவரையும் சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற யாழ்பாணத்தை சேர்ந்த படகோடிகள் இருவர் என மொத்தமாக நான்கு பேரையும் கைது செய்த அந்நாட்டு கடற்படையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் யாருடைய உதவியுடன் தங்கியிருந்தார்கள் என்பது குறித்தும் இலங்கையில் இருந்து இவர்களை தமிழகத்திற்கு சட்டவிரோதமாக அழைத்து சென்றவர்கள் குறித்தும் இலங்கை உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தமிழகத்தில் இவர்களுக்கு அடைக்கரலம் கொடுத்த நபர்கள் குறித்து தமிழக உளவுத்துறை அதிகாரிகள் நாகப்பட்டிணம் கடற்கரைப் பகுதியில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *