தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும் அதன் ஒரு கட்டமாக வாகன இலக்க தகடுகளை தபால் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
மேலும் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்தோடு வருடாந்தம் தபால் திணைக்களத்திற்கு9 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கின்ற போதிலும், 14 பில்லியன் ரூபா செலவு காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.
மேலும் 5 பில்லியன் ரூபா நிதியை திறைசேரியிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதன்படி, தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்காக, மோட்டார் வாகன திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் இலக்கத்தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டு வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.