இலங்கைக்கு இதுவரையில் 1 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அவற்றுள் நூற்றுக்கு 72 சதவீதமானவை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக இலங்கை ரூபாவில் 1,546 கோடி செலவழித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், எதிர்காலத்தில் சீனாவிடம் இருந்து 16 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அன்பளிப்பாக கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இதுரையில் 80 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும் 5 இலட்சம் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளும் 180,000 ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகளும் 115,830 பைஸர் தடுப்பூசிகளையும் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.