பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற கம்பனிகளின் அடக்கு முறைகளுக்கும் அடாவடிதனங்களுக்கும் எதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் மஸ்கெலியா எரிபொருள் நிலையத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது எனக்கூறப்பட்டாலும் தொழிலாளர்களின் தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கான பெயருக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டியுள்ளது. அதேபோல பல தோட்டங்களில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும் நலன்புரி சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான அடக்குமுறை செயற்பாடுகளை கம்பனிகள் கைவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.