தமிழ் தேசிய வீரர்கள் தினம் இன்று (25) தமிழ் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் யாழில் உள்ள அவர்களது கட்சி அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான என்.சிறீகாந்தா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில், இலங்கையில் 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையின் ஒரு பகுதியான கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகளில் கொல்லப்பட்ட தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன், நடேசுதாசன், சிவபாதம், தேவன் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் தமிழின விடுதலைப் போராட்டத்தில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கும் இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.