நாட்டில் டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை தொடருமானால் இலங்கையில் 4ஆவது கொரோனா அலை பரவக் கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தற்போதைய மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
மேலும் அவ்வாறு நடந்துகொண்டால் மாத்திரமே 4ஆவது கொரோனா அலையை கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.