
இலங்கையின் மதச் சுதந்திரம் தொடர்பில் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
அந்தவகையில்,
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் தொடர்ந்தும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை சிறுபான்மை மதங்கள் மீது திணிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மத போதகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் அவர்களது பணிகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளதாகவும் அரசாங்க பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளது எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை 2020ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டில் மத ரீதியான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கிறிஸ்தவ, பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களை மேற்கோள்காட்டி அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
இலங்கைக்கு சரியான தலைமைத்துவம் கிடைக்கவில்லை;சொல்ஹெய்ம் கவலை!
கவலைக்கிடமான நிலையில் இலங்கை;விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
அமெரிக்க துாதர்-வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சந்திப்பு!
முல்லையில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்

