தற்போது தனியார் துறையினால் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை அரச நிறுவனம் ஒன்றின் ஊடாக நேரடியாக நாட்டுக்கு கொண்டு வர அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதற்கான அமைச்சரவை பத்திரம் தற்போது அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் தனியார் பிரிவின் தன்னிச்சையான செயற்பாடு என்பவற்றை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது கலைக்க உத்தோசிக்கப்பட்டுள்ள அரச வணிக கூட்டுறவு மொத்த வர்த்தக நிறுவனத்தை மீண்டும் வலுப்படுத்தி அதன் ஊடாக குறித்த பொருட்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீனி, கோழி இறைச்சி, தேங்காய் எண்ணெய், பருப்பு, வெங்காயம், கிழங்கு போன்ற அத்தியாவசிய பொருட்களை அந்த நிறுவனம் ஊடாக நேரடியாக இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.