இலவசக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பூண்டுலோயாவில் போராட்டம்

சேர்.ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுமாறும் இலவசக் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பூண்டுலோயாவில் போராட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள்,  சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள்  ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு இடமளிக்ககூடாது என வலியுறுத்தினர்.

மேலும் நாட்டில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் அனைத்து மக்களும் எதிர்நோக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களின் விலையை உடனே குறைக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *