டயகம சிறுமி ஹிசாளினி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் எவையுமில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சிறுமி தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த வாக்குமூலத்தையும் வழங்கவில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் முடித்த விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இன்னொரு நபரே என்ன நடந்தது என வாக்குமூலம் வழங்கினார் என மருத்துவர்களே குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக சிறுமி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது நிபுணர்களின் ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.