காணாமல் போனவர் பொது மைதானத்தில் சடலமாக மீட்பு

கல்முனை,ஜுன் 04

கல்முனையில் பொது மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஒருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன் கடந்த வியாழக்கிழமை (2) மாலை காணாமல் போயிருந்த நிலையில் பொது மைதானத்தில் சடலமாக காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு கல்முனை பொலிஸ் குழுவினர் சென்று விசாரணை மேற்கொண்டு தடயப் பொருட்களை ஆய்வு செய்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு குடும்பத்தினர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *