ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையிலான தொடர் இலங்கையில் !

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1 முதல் ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இதன் முதலாவது போட்டி நடைபெறும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்தத் தொடர் ஆரம்பத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டமிடப்பட்ட போதும் ஒரு சில காரங்களினால் அங்கு நடத்த முடியாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐ.பி.எல். 2021 இன் எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் அதேவேளை அங்கும் ஓமானிலும் உலகக்கிண்ண T20 போட்டி இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *