நாட்டில் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் கடந்த சில மாதங்களாக கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறாக நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக பலதரப்பினரும் கோசங்களை எழுப்பி போராடி வரும் நிலையில் கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி போராட்டத்தை கடந்த ஏப்ரல் 09ம் திகதி ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த போராட்டமானது அதன் இலக்கை எட்டும் வரை தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் ஆர்ப்பாட்ட காரர்கள் அறிவித்துள்ளனர்.
அதேவேளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதி கோட்டா கோ கம என பெயரிடப்பட்டதோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான வசதிகளை உள்ளடக்கிய பகுதியாக கோட்டா கோ கம பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக காலிமுகத்திடலில் அமைக்கப்பட்ட கோட்டா கோ கம பகுதியானது நாட்டின் பல பாகங்களிலும் குறிப்பாக மட்டக்களப்பு கண்டி காலி போன்ற பல இடங்களிலும் அமைக்கப்பட்டு அங்கிருந்து அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 09ம் திகதி கண்டியிலுள்ள கோட்டா கோ கம மீது அரச தரப்பு ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அதேவேளைதாக்குதலின் பின்னரும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இவ்வாறாக கண்டி நகரில் ஆரம்பிக்கப்பட்ட கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களம் இன்றுடன் 50நாட்களை நிறைவு செய்துள்ளது.
இதேவேளை கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





பிறசெய்திகள்
· Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
· Twitter: சமூகம் ட்விட்டர்
· Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்




