டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பாடசாலை மாணவன்

டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் இலங்கையில் முதன் முறையாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பேருவளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்கு உட்பட்ட ஹிரிகல்கொடெல்ல பகுதியை சேர்ந்த 11 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவருக்கு இவ்வாறு டெல்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதத்தோடு இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 1,190 பேர் இன்று (25) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 296,040 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *