
கடந்த மாதம் 20ம் திகதி அரசாங்கம் 21 திருத்த சட்டத்தை அகற்றும் யோசணை கொண்டுவருவதாகவும் , அதை கட்சி தலைவர்களிடம் முன்வைக்க வேண்டும் எனவும் 23ம் திகதி அங்கீகரிப்பதாகவும் , அடுத்த வெள்ளிகிழமை மாநாடு கூட்டி கட்சி தலைவர்கள் வரவில்லை என்று விட்டனர்
பின் 30ம் திகதி அமைச்சரவை அங்கீகாரத்துக்கு விடுவதாக சொன்னார்கள் . இவர்கள் இந்த விடயத்தை இழுத்தடிப்பதை பார்க்கும் பொழுது அரசாங்கத்தில் சந்தேகம் எழுகின்றது என முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
பிரதமர் அரசாங்கத்தையும் மகிழ்த்துக்கொண்டு ,தானும் தப்பிக்கொண்டு ,மக்களை பகடை காய் ஆகி பாசாங்கம் காட்டுகின்றனர் .
பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்று கூறிய போதும் அது நகல் சட்டமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை .
முஸ்லீம் காங்கிரசை பொறுத்த வரையிலும் எதிர் கட்சிகளை பொறுத்த வரையிலும் ,19வது திருத்த சட்டம் மீள கொண்டு வர முழு ஆதரவு அளிக்கின்றோம் . 2/3 பெரிய விடயமல்ல இருந்தும் நாங்கள் பயம் கொள்ளுகின்றோம் மீண்டும் பிரதமர் என்ன மாதிரியான சாட்டுகள் கூறுவார் என்று தெரிவித்தார்.
பிறசெய்திகள்
· Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
· Twitter: சமூகம் ட்விட்டர்
· Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்




