உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் முக்கிய சந்தேகநபர்கள் மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து அண்மையில் ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பான விசாரணைகளுக்காக சட்டமா அதிபர் பல சிறப்புக் குழுக்களை நிறுத்தியுள்ளதாகவும் அலி சப்ரி குறிப்பிட்டார்.
இதற்கிடையில்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.