
இலங்கையில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் வாகன விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்கு;
டொலர் தட்டுப்பாடும், வற் வரி உயர்வுமே இதற்கு காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக கார் டயர் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களின் விலையும் உயர்ந்துள்ளது.




