மின்வெட்டு

நாளை மறுதினம் ( 06 ) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

இதற்கமைவாக , ஜூன் 6 ஆம் திகதி முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாளாந்தம் 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென ஆணைக்குழு அறிவித்துள்ளது .

11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியாலத்திற்கும் மின் விநியோகம் தடைப்படுமென இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

எவ்வாறாயினும் , நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *