
கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் நிசாந்தன் சபீசன் என்ற ஒன்றரை வயது குழந்தை நீர்ப்பாசன வாய்க்காலுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த குழந்தையின் வீட்டுக்கு அருகில் இரணைமடு நீர்ப்பாசன வாய்க்கால் காணப்படுகிறது.
தற்போது அந்த வாய்க்கால் சிறுபோக நெற்செய்கைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அதிகளவு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.
குறித்த வாய்க்காலுக்குள் விழுந்த குழந்தை 2 கிலோ மீற்றர் தூரம் வரை நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் குறித்த குழந்தை உயிரிழந்த நிலையில் அயலவர்களினால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.




